ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் கட்டுப்பாட்டிலுள்ள Kramatorsk நகர மையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கட்டட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாமென தெரிவிக்கப்படும் நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை உக்ரைனுடனான தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியுள்ளதை தொடர்ந்து சர்வதே உணவு விநியோகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
உக்ரைனின் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதித்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதாக ரஸ்யா அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் உணவுவிநியோகம் மீண்டும் பாதிக்கப்படலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.
துருக்கியினதும் ஐக்கிய நாடுகளினதும் முயற்சி காரணமாக கடந்த வருடம் ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த உடன்படிக்கை நேற்று நள்ளிரவுடன் காலாவதியாக உள்ள நிலையில் அந்த உடன்படிக்கையை மீண்டும் புதுப்பிக்கப்போவதில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட உடன்படிக்கை உக்ரைன் தனது தானியங்களை கடல் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கு அனுமதித்தது
கருங்கடலில் ரஸ்யாவின் முற்றுகையை கடந்து கப்பல்கள் துருக்கியின் பொஸ்பரஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக சர்வதேச சந்தையை சென்றடைந்தன.
உக்ரைனை சென்றடைவதற்கு முன்னர் கப்பல்களை ரஸ்ய உக்ரைன் துருக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். கப்பல்களில் ஆயுதங்கள் கடத்தப்படாமலிருப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,