உக்ரைனுடனான தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியுள்ளதிற்கு உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியுள்ள போதிலும் உக்ரைனின் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதி தொடர வேண்டும் எனவும் உக்ரேன் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு நாட்டினது உணவு பாதுகாப்பினை அழிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏவுகனைகளைப் பயன்படுத்தி தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
ஒடேசாவின் தெற்கு துறைமுகம் மற்றும் Mykolaiv, Donetsk, Kherson, Zaporizhia ; மற்றும் Dnipropetrovsk; ஆகிய பகுதிகள் மீது ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.