15 வயது வரையான குழந்தைகளுக்கு கட்டாயமாக போடப்படும் தடுப்பூசிகளை போட வேண்டும் என தேசிய நோய்த்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சமித்த கினிகே கூறுயள்ளார்.
அத்துடன், தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 15 வயது வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
தேசிய நோய்த்தடுப்பு திட்டத்துக்காக கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை மட்டுமே எனவும், நோய் தடுப்புக்காக உரிய தடுப்பூசிகளை பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.