ரணிலும் சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பிரதமர் ரணிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புகின்றார்கள், நாமும் விரும்புகிறோம்.
ஆனால், அது எமது கைகளில் மாத்திரம் இல்லை. பல புற சக்திகள் அதற்கு தடையாக இருக்கின்றன.அதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
எமது பிரதான நோக்கு, எமது மக்களின் விடிவுக்கு நிரந்தர தீர்வுகளான காணி உரிமையும், வீட்டு உரிமையும், கல்வி உரிமையும் உறுதிப்படுத்தப்படுவதாகும். கல்வி உரிமைக்கு இந்திய அரசு உதவும் என நான் நம்புகிறேன்.
காணி உரிமையை, நாம் இலங்கையில் பெறுவோம். இவற்றை எப்படி பெறுவது என்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்க்கதரிசனத்துடன் நடக்கின்றது.
நாம் நினைத்தால், உடன் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறலாம். ஆனால் அதைவிட இதுவே எமது நிதானமான தீர்க்கதரிசன நோக்கு என்பதை நான் பொறுப்புடன் கட்சி தலைவராகக் கூறி வைக்க விரும்புகிறேன்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.