சந்திரயான் -3 விண்கலம் ஏவும் நடவடிக்கையின் மூலம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் டெக்னோலஜிஸ் மானிய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜிதேந்திர சிங் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்திராயன் ஏவப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் இடம்பெற்ற இந்த நிகழ்வு ஒரு முக்கிய புள்ளியாக அமைந்துள்ளது என்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஒப்பந்தங்களில் ஒன்று, இந்திய விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அவர்களுடன் வருமாறு கோருவது என்றும் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 21ஆம் நூற்றாண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சொல்லாடல்களால் மட்டும் வலுப்படுத்தாமல் தொழில்நுட்பத்தாலும் வலுவடைய செய்துள்ளதாகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.