கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இயந்திரப்பகுதி பழுதடைந்து பயணத்தை தொடராது சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டது.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் நேற்றுமாலை தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது.
இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.
இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது.
பல மணி நேரமாகியும் புகையிரதம் பயணத்தினை தொடராத நிலையில் பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் வருகை தந்து குறித்த புகையிரத்தினை இழுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.