நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இதற்கமைய 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஜூலை மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவையடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார். குறித்த வாக்களிப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்றார்.
மேலும் இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் ஜூலை மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.