உக்ரைனில் உள்ள பல முக்கிய துறைமுகங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உக்ரைனின் ஒடேசாவில் உள்ள சீன துணைத் தூதரகமும் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், உக்ரைனின் தானியக் கப்பல்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், உலக உணவுப் பொருட்களின் விலையும் பாதிக்கப்படலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வளர்ந்து வரும் நாடுகளே அதிகளவான பாதிப்பை சந்திக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.