இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு 200 ரூபா வரி விதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று பாராளுமன்றத்தில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படாமையால் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.