பெண்களுக்கான உலகக் கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் டென்மார்க், இங்கிலாந்து மற்றும் ஜப்பான் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
நியூசிலாந்தில் இடம்பெற்ற குழு டி பிரிவுக்கான போட்டியில் டென்மார்க் மற்றும் சீனாவும், இங்கிலாந்து மற்றும் ஹைட்டி அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.
அதன்படி முதலில் இடம்பெற்ற போட்டியில் 89 ஆவது நிமிடத்தில் அமலி வங்ஸ்கார்ட் கோல் அடிக்க சீனாவை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி டென்மார்க் மகளீர் அணி வெற்றிபெற்றது.
இங்கிலாந்து மற்றும் ஹைட்டி அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டியில் 29 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜோர்ஜியா ஸ்டான்வே ஒரு கோலை புகுத்தினார்.
தொடர்ந்து இரு அணிகளும் கோலை புகுத்த பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்காத நிலையில் இறுதியில் இங்கிலாந்து அணி 1-0 என வெற்றிபெற்றது.
இதேவேளை குழு சி பிரிவில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் சாம்பியா அணியை 5-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றிபெற்றுள்ளது.