லஃஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது, லஃஸ்எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து லாஃப்ஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும், விலை திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை அடுத்த வாரத்தில் வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவிற்கும் விலை சூத்திரம் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு விடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.