நாடு திவாலானதற்கான காரணங்களைக் கண்டறிய பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற குழு முடிவு செய்துள்ளது.
அனைத்து பல்கலைக் கழகங்களின் பொருளாதார துறை பேராசியர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
வங்குரோத்து நிலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதே தனது குழுவின் முதன்மையான நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.