நாட்டில் தற்போது போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6,192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் 35,402 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் 5,367 மெற்றிக் தொன் ஒக்டேன் 95 பெற்றோல் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் 30,173 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக எரிபொருள் இருப்பில் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும், அது மீளமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.