உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமா அதிபர் அலுவலகம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலம் மீதான விசாரணையின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பிரேரணையாக கொண்டுவரப்பட்ட குறித்த சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் நிறைவேற்ற வேண்டுமாயின் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுவாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகள் அரசியலமைப்பை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 27 மனுக்கள் இன்று (திங்கட்கிழமை) மீள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனைத் தெரிவித்தார்.