இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 2022 ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 39.31% அதிகரித்து 13.11 லட்சம் டன்களை எட்டியுள்ளது.
அதிக தேவை காரணமாக, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கரைப்பான் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஒப் இந்தியா (SEA) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 9.91 லட்சம் டன்னாக இருந்த காய்கறி எண்ணெய்களின் ஒட்டுமொத்த இறக்குமதிஜூன் மாதத்தில் 49 சதவீதம் அதிகரித்துள்ளது..
2,900 டன்கள் சமையல் அல்லாத எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவை முக்கியமாக சோப்பு மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளினால் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, முந்தைய மாதத்தில் 2.95 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 1.90 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து பாம் ஒயில் இறக்குமதி 4.76 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என்றும், மலேசியாவின் பங்கு 1.54 லட்சம் டன் என்றும் SEA மேலும் குறிப்பிட்டுள்ளது.
பிரேசிலில் இருந்து வரும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 2023 ஜூன் மாத நிலவரப்படி 1.65 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
நவம்பர்-ஜூன் காலத்தில் லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து மொத்த சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 9.73 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.