வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.