ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான் 3 ஐ இந்தியா கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
சந்திரனுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய வாழ்த்துவதாகவும் நாசாவின் லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் வரிசை உட்பட, அறிவியல் ஆய்வு முடிவுகளை பெற ஆர்வமாக இருப்பதாகவும் நாசா நிர்வாகி பில் நெல்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் பிரித்தானியாவின் ஸ்பேஸ் ஏஜென்சியும் இந்தியாவில் உள்ள பிரெஞ் தூதரகமும் இஸ்ரோவை வாழ்த்தியுள்ளன.
மேலும் அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் வாழ்த்தியுள்ள அதேநேரம் இந்தியாவின் விண்வெளி ஒடிஸியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம், இந்தியா இன்று தனது வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
பூமியிலிருந்து சந்திரனுக்கு விண்கலத்திற்கான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது அத்தோடு ஓகஸ்ட் 23 அன்று சந்திரயான்-3 தரையிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சந்திர ஆய்வுப் பணியானது, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக, நிலவின் மேற்பரப்பில் தனது விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக இந்தியாவை உருவாக்கும்.