இராமாயணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து நேபாளிக்கு மொழிபெயர்த்த பிரபலஇலக்கியவாதி பானு பக்த ஆச்சார்யாவின் நினைவாக சிக்கிமில் 209வது பானு ஜெயந்தியைக் கொண்டாடப்பட்டது.
‘ஆதி கவி’ அல்லது நேபாளி மொழியின் முதல் கவிஞர் என்று கருதப்படும் அவரது பிறந்த நாள் சிக்கிமில் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
பானு பக்த ஆச்சார்யாவின் சிலைக்கு ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா மற்றும் முதல்வர் பிரேம் சிங் கோலே உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
மேலும் அங்கு உரையாற்றிய ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, நேபாளி மொழி மீது பானு பக்த ஆச்சார்யாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை எடுத்துரைத்தார்.
பானு ஜெயந்தி என்பது ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, சமூகத்தின் பல்வேறு இலக்கிய, கலை மற்றும் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் ஒரு தளம் என்றும் .கூறியுள்ளார்.
அத்தோடு இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய ஏற்பாட்டுக் குழுவினருக்கு ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு திருவிழா அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியேறிய சொல்லை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியதாகவும் முதல்வர் பிரேம் சிங் கோலே கூறியுள்ளார்.
இது சிக்கிமில் உள்ள அனைத்து நேபாள சமூகத்திற்கும் மாநிலத்திற்கு அப்பாற்பட்டவர்களுக்கும் நீண்டகாலமாக தேவைப்படும் அங்கீகாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.