இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று வரை மொத்தம் 55 ஆயிரத்து 49 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் 52 பிரதேசங்கள் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதிகளவான நோயாளிகள் குறிப்பாக 11,929 பேர் கமபஹாவில் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மொத்தமாக 27,315 நோயாளர்களுக்கு, கண்டியில் 3,841 நோயாளிகளும், புத்தளத்தில் 2,869 நோயாளிகளும், இரத்தினபுரி மற்றும் கேகாலையில் முறையே 2,226 மற்றும் 2,210 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
இலங்கையில் இவ்வருடம் மே மாதத்தில் 9,916 டெங்கு நோயாளர்களும் ஜூன் மாதத்தில் 9,916 நோயாளர்களும் இந்த மாதத்தில் மொத்தம் 5,729 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.