தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
23ஆம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
மேலும் இது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் இலங்கையில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும் என வெளிவிவகார அமைச்சு கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.













