நாவற்குழி மகா வித்தியாலயத்தில் 1982 தொடக்கம் 1992 காலப் பகுதியில் கல்வி கற்ற 92 க.பொ.த.சாதாரண பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 ஆண்டுகள் கடந்து ஒருங்கிணைத்து நடத்தும் ஆசான்களைப் போற்றி கௌரவிக்கும் நிகழ்வு எதிர் வரும் 30 ஆம் திகதி நாவற்குழி மகா வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில் வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பழைய மாணவர்களும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் வருகை தரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது கலந்துரையாடல், கருத்து பரிமாற்றம், பழைய நினைவுகளை மீட்டல், மதியபோசனம் உள்ளிட்ட பல பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் சிறந்த வித்தியாலங்களில் ஒன்றாக விளங்கிவரும் இப்பாடசாலையானது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும் இப் பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்று வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் புகழ் படைத்தவர்களாக வலம் வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது இப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கங்கள் இன்று பல நாடுகளில் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.