நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் 3000 கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பலொன்று நேற்றைய தினம் (26) நடுக்கடலில் வைத்து தீ பிடித்து எரிந்துள்ளது.
ஜேர்மனியின் துறைமுகமான ப்ரெமனில் இருந்து எகிப்தில் உள்ள போர்ட் சைட் துறைமுகத்தை நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பலே இவ்வாறு தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் கப்பலில் இருந்த23 ஊழியர்களும் ஹெலிகொப்டரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அக்கப்பலில் இருந்த அனைத்து கார்களும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அது அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.