மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த மனிதப் புதைகுழிகளுக்கான நீதி இற்றைவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த கனகரத்தினம் சுகாஷ், இனியும் நாம் நீதிக்காகக் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் காலதாமதமின்றி உடனடியாக இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு முன்னர் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி சர்வதேச கண்காணிப்போடு, சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.