இலங்கைக்கு கடன் வழங்கும் செயற்பாடுகளில் சீனாவும் இணைந்துகொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற அடிப்படையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக இந்தியா, ஜப்பான் ,பிரான்ஸ் ஆகியநாடுகள் மேற்கொண்டுள்ளன.
இந்த நாடுகள் முன்னெடுக்கும் முயற்சியில் சீனாவும் இணைந்துகொள்வதை வரவேற்பதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கான நிவாரண நடவடிக்கைகளை உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.