வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருநபர் படுகாயமடைந்துள்ளார்.
சோதனை சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவியந்திரம் மற்றும் பழுதடைந்துநின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு படுகாயமடைந்த மற்றொரு நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் 23வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார் என்றும் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- தமிழ்க் கட்சிகளை அவசரமாக சந்திக்கின்றார் கோபால் பாக்லே
- 150 அடி பள்ளத்தில் பாய்ந்து உழவு இயந்திரம் : 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
- கடன் வழங்கும் செயற்பாடுகளில் சீனாவும் இணைந்துகொள்ள வேண்டும் – நிர்மலா சீத்தாராமன்
- அதிகாரப்பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல்
- வலி வடக்கு காணி உரிமையாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு