போராட்டத்தின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் மாநாடு ஒன்றினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்த தானிஷ் அலி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சிலர் ஒன்றிணைந்து குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 6 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை சிங்கப்பூர் மண்டபத்தில் போராட்டத்தின் எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ராஜித சேனாரத்னவின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன தலைமையிலான ஜனநாயக தேசிய இயக்கத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் 25 மாவட்டங்களையும் குறித்த மாநாடுகளில் உள்ளடக்க எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டாளரான தானிஷ் அலி மேலும் தெரிவித்துள்ளார்.