கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை இலங்கையின் பொருளாதாரத் திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி, அந்த இடத்தை வர்த்தக வாய்ப்புக்காக வழங்கினால் பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நகர மேம்பாட்டு பணிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பொறியாளர்கள் தேவைப்படுவதாகவும்,
இதனூடாக நிர்மாணத்துறையில் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.