நிரந்தரமாக தமிழர்கள் இந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுடைய பிரதிநிதியாக 1987 ஆம் ஆண்டிலே இலங்கை இந்தியா ஒப்பந்தத்திலேயே கையொப்பமிட்டு இருந்தது.
எனினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தீர்வுகள் என்பன சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
மேலும் பொறுப்பு வாய்ந்த ஒரு தரப்பு என்ற வகையில் இந்தியாவினால் நேர்மையாக இதய சுத்தியோடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கின்ற ஆதங்கமும் கேள்வியும் தமிழ் மக்களிடையே நீண்ட காலமாக இருக்கிறது.
புதிதாக நாங்கள் பாலம் அமைக்கிறோம் அல்லது எண்ணை குழாய்களை கொண்டு வருகிறோம் என்பது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவதாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.