அவசர மருந்துக் கொள்வனவு நடவடிக்கைகளைத் தற்காலகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சில மாதங்களில் அவசர மருந்துக் கொள்வனவு நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டிலுள்ள மருந்து தேவைப்பாட்டை நிவர்த்தி செய்துகொள்ளும் நோக்கத்தில் மாத்திரம் அவசர மருந்து கொள்வனவை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஒளடத ஒழுங்குப்படுத்துதல் அதிகாரசபையில் இருக்கும் குறைப்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.