எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆதரவினைப் பெற்று ஜனாதிபதியாக வருவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் ஆதரவும் செல்வாக்கும் காணப்பட்டு நாட்டு மக்கள் அவரை ஏற்றுக்கொண்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் ஜனாதிபதியாக வருவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
மேலும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் 10ம் திகதி நாடாளுமான்றத்தில் இடம்பெறவிருக்கின்ற விவாதத்தின் போது குறித்த மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்க உள்ளேன்.
எதிர்வரும் 12ம் திகதி தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள நுவரெலியா தொடக்கம் தலவாக்கலை வரையிலான நடைபவனியானது தலை மன்னார் தொடக்கம் மாத்தளை வரையிலான முன்னெடுக்கப்படுகின்ற மாண்புமிகு மலையகம் நடைபவனிக்கு ஆதரவாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
@athavannews அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதில் ஆட்சேபனையில்லை! #news#updats#athavan#slnews