லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணிக்கு தம்புள்ளை அவுரா அணி 135 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் 134 இழப்புக்கு ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் பெரேரா 41 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சொயிப் மாலிக் மற்றும் நுவான் துசார ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் மஹேஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் சில நிமிடங்களில் 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.