மன்னார், மடு திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு வெஸ்பர் ஆராதனை இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார், மடு திருத்தலத்தின் வேஸ்பர் ஆராதனை இன்று இலட்சக்கணக்கான யாத்திரிகள் முன்னிலையில் இடம்பெற்றது.
இதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
நாளைய தினம் மடு திருத்தலத்தின் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் திருவிழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ள உள்ள நிலையில் விசேட பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி, நாளை காலை 6.15 மணிக்கு திருத்தந்தையின் பிரதிநிதி தலைமையில் ஆயர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்க உள்ளனர்.