லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி, பி-லவ் கண்டி அணிக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு-ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், தம்புள்ளை அவுரா அணியும் பி-லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பி-லவ் கண்டி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அவிஷ்க பெனார்டோ 41 ஓட்டங்களையும் பென் மெக்டர்மோட் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் சத்துரங்கடி சில்வா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்னமும் சில நிமிடங்களில் பி-லவ் கண்டி துடுப்பெடுத்தாடவுள்ளது.