லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 20ஆவது போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி, காலி டைடன்ஸ் அணிக்கு 75 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி, 15.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக லஹிரு உதார மற்றும் நுவனிந்து பெனார்டோ ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், டப்ரைஸ் சம்ஸி 4 விக்கெட்டுகளையும் சிக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 75 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி காலி டைடன்ஸ் அணி இன்னமும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.