அமெரிக்காவின் ஹவாயில்; தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்துமாறு அமெரிக்கா ஜனாதிபதிJoe Biden அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹவாய் தீவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் ஆளுநர் ஜோஷ் கிரீனிடம் இதன்போது உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கள ஆய்வையும் அமெரிக்கா ஜனாதிபதி Joe Biden இன்று முன்னெடுத்துள்ளார்.
ஹவாய் தீவில் கடந்த 8 ஆம் திகதி ஏற்பட்ட காட்டு தீயினால் 93 இற்கும் மேற்பட்மோர் உயிரிழந்துள்ளதுடன் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்
அத்துடன் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது 85 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.