தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட்டுக் கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதி கட்டியெழுப்பியுள்ளார் எனவும், இதேபோன்று வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுப்பார் எனவும் நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவுள்ளது எனவும் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியினை பலப்படுத்துவதன் மூலம் வடக்கு மக்கள் மாத்திரமில்லாது, இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.














