பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிக்கமுடியாத பொருட்கள் பல திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அருங்காட்சியகத்தில் கி.மு. 15ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அவ்வப்போது இங்கு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருவதால் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பேர் இதனைப் பார்வையிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் அருங்காட்சியகத்தில் நடத்திய ஆய்வின்போது பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
எனினும் சமீப காலமாக அங்கு கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கண்காட்சியின்போது இவை திருடப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இச்சம்பவம் இது தொடர்பாக ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அருங்காட்சியகத்தின் தலைவர் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.