2021 ஆம் ஆண்டு நாணய மாற்று முறையின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது.
இம்மாதம் 17 ஆம் திகதி குறித்த தவணைப்பணம் செலுத்தப்பட்டதாக பங்களாதேஷ் வங்கியின் ஊடக பேச்சாளரும், நிர்வாக பணிப்பாளருமான மெஸ்பால் ஹக், உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டாவது தவணை எதிர்வரும் 30 ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்த ஆண்டுக்குள் இலங்கையிடமிருந்து மொத்தத் தொகையையும் திரும்பப் பெற எதிர்பாத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் வரை மூன்று மாதங்களில் இரண்டு முறை கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
இறுதியாக, கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாதங்கள் அதாவது செப்டம்பர் வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடன் ஒப்பந்தத்தின்படி, செலுத்த வேண்டிய வட்டியை இலங்கை முறையாக செலுத்தி வருவதாக பங்களாதேஷ் வங்கி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.