ரஷ்யாவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இதன்படி 15 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கே இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரினை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கையினை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு, உக்ரைன் போருக்கு மத்தியில் 2023 முதல் மாணவர்களுக்கு சோவியத் பாணியில் இராணுவப் பயிற்சியை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக மொஸ்கோ அறிவித்தது.
பாடசாலைகளில் இதுபோன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவது, எதிரியுடனான மோதலுக்கு மக்களை முறையாக தயார்படுத்துவதை சாத்தியமாக்கும் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.