உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜி 20 அமைப்புக்கு இந்த வருடம் இந்தியா தலைமை வகிக்கின்றது.
அந்த அமைப்பின் உச்சி மாநாடு புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட பல்வேறு நாடுகளின் ஜனாதிபதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில் , உச்ச நீதிமன்றத்திற்கு எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்; விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.