அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக திறைசேரி அரச வங்கிகளுக்கு 5 பில்லியனை விடுவித்துள்ளது.
மாதாந்திர நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கத் தொடங்கியுள்ள நிலையில் வங்கிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிதி வழங்கல் தொடர்பான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக அமைச்சின் அதிகாரிகளுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.