பாகிஸ்தானில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பாகிஸ்தானில் மின்சார கட்டணங்கள் கடந்த 15 மாதங்களில் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது