ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரு தரப்பையும் சமரசம் செய்ய, உள்ளக கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு கட்சிகளும் அண்மைக்காலமாக ஒருவருக்கு ஒருவர் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த போதிலும், அவை தற்போது சற்று குறைவடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இரு கட்சிகளையும் ஒன்றிணைக்க ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பு காட்டிய போதும் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பில் உள்ள சிலர் கட்சிகளின் இணைப்புக்கு அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இரண்டு கட்சிகளும் இணைவது குறித்து தகவல்கள் வெளியாகும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.