சீனாவில் நடைபெற்று வரும் நிங்போ பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீராங்கனையான கசகஸ்தானின் எலினா ரிபாகினா கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தொடரின் காலிறுதிப் போட்டியில், போலந்தின் தகுதிச் சுற்று வீராங்கனையான கட்டார்சினா கவாவை ரிபாகினா எதிர்கொண்டார்.
போட்டியின் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ரிபாகினா, அதனை 6–1 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும், இரண்டாவது செட்டில் சிறப்பாக விளையாடிய கவா, 6–3 என்ற கணக்கில் அந்தச் செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இதனையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் தனது திறமையை வெளிப்படுத்திய ரிபாகினா, 6–1 என்ற கணக்கில் அதனைக் கைப்பற்றினார்.
இதன்படி, 6–1, 3–6, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற ரிபாகினா, நிங்போ பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அரையிறுதிப் போட்டியில் ரிபாகினா, ரஷ்ய வீராங்கனையான டயானா ஷ்னைடரை எதிர்கொள்ளவுள்ளார்.

















