ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னர் கியூபா மீதான அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் கியூபா மீது அமெரிக்க கடற்படை மூலம் அழுத்தம் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
ஃபுளோரிடா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் பிரசாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட போது இதனை தெரிவித்துள்ளார்.
தனக்குக் கொஞ்சம் இடைவேளைக் கொடுங்கள். ஈரானில் இருந்து திரும்பும் வழியில் கியூபாவை தாங்கள் பார்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கியூபா மீது இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? அல்லது அந்நாட்டு அரசு உடன் உறவுகள் மேம்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.
ஏற்கெனவே, கம்யூனிஸ்ட் நாடான கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இதேநேரம் கடந்த திங்கட்கிழமை முன்னாள் கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவுக்கு (Raúl Castro) எதிராக ஃபுளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்தது.
















