நஹீத் அபிதி, சமஸ்கிருதத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து உரையாடியுள்ளார். அவரது வாழ்க்கையை எளிதாக ஆரம்பிக்கவில்லை.
ஆரம்பத்தில், அவருக்கு வேலை கிடைப்பதில் நெருங்கடிகள் இருந்தன. மேலும் கல்வியாளர்கள் அவருடைய ‘அசாதாரண’ பாடத்தேர்வைப் பற்றி அடிக்கடி யோசித்துக்கொண்டிருந்தார்கள்.
உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் ஷியா முஸ்லிம் நிலப்பிரபுக் குடும்பத்தில் 1961 ஆம் ஆண்டு பிறந்த அவர் சமஸ்கிருதத்தை தனது பாடமாக தேர்ந்தெடுத்து, கமலா மகேஸ்வரி பட்டப்படிப்புக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மிர்சாபூரின் பட்டப்படிப்புக் கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
வழக்கறிஞர் எஹ்தேஷாம் அபிதியை திருமணம் செய்தவர், வாரணாசிக்கு குடிபெயர்ந்தார். இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்த அவர், முனைவர் பட்டத்தையும்; பெற்றார்.
மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்திலிருந்து, 1993 ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தின் போது அவரது ஆய்வறிக்கை ‘வேதிக் சாஹித்யா மே அஷ்வினியோன் கா ஸ்வரூப்’ (வேத இலக்கியத்தில் அஷ்வினிகளின் வடிவம்) என்று பெயரிடப்பட்டது.
2005இல் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக சம்பளம் ஏதுமின்றி பணிபுரிய தொடங்கினார் அவர் மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தில் தினசரி ஊதியத் திட்டத்தில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
அவரது முதல் புத்தகம் 2008 இல் வெளியிடப்பட்டது. அது சமஸ்கிருத இலக்கியத்தில் ரஹீம் என்று பெயரிடப்பட்டது – இது பிரபல கவிஞர் அப்துல் ரஹீம் கான்-இ-கானாவின் சமஸ்கிருத சார்புகளின் கணக்கு என்பதை மையப்படுத்தியதாகும்.
இதைத் தொடர்ந்து சர்-இ-அக்பர் என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதினார், இது 50 உபநிடதங்களின் இந்தி மொழிபெயர்ப்பாகும், இது முதலில் முகலாய இளவரசர் தாரா ஷிகோவால் எழுதப்பட்டது. ஷிகோவால் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாந்தத்தின் இந்தி மொழிபெயர்ப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.