மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் மற்றும் காணாமல்போன உறவுகளுக்காகக் குரல்கொடுக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழரசுக்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.