10 மாதங்களுக்கு முன்னர் காலாவதியான திரிபோஷா கையிருப்பு நேற்று தமக்கு விநியோகிக்கப்பட்டதாக திரிபோசாவை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சொந்தமான கஹ்பொல ரெகிதெலவ்வத்த தாய் மற்றும் சிறுவர் சிகிச்சை மையத்தில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த திரிபோஷாக்களை எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டுவந்து மாற்றிக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
3 வயதுக்கும் 5 வயதுக்கும் இடைப்பட்ட எடை குறைந்த குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்க சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்காக தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு திரிபோஷா பொதிகள் வழங்கப்படும் எனவும் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இது தவறு என அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.