சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலமானது கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி தற்போது ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவரில் உள்ள ஏ.பி.எக்ஸ்.எஸ். கருவி கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது கந்தகம் தவிர வேறு சில சிறு தனிமங்களையும் அந்த கருவி கண்டுபிடித்திருப்பதாகவும், கந்தகம் இருப்பதற்கு காரணம் எரிமலையா? எரிகல்லா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான பாதையைத் தேடி பிரக்யான் ரோவர் சுற்றி வலம் வந்த காட்சியை விக்ரம் லேண்டரின் கேமரா படம் பிடித்துள்ள நிலையில் குறித்த காட்சியை பகிர்ந்துள்ள இஸ்ரோ, சந்திரனில் குழந்தை விளையாடுவதை தாய் பாசத்துடன் வேடிக்கை பார்ப்பது போல அக்காட்சி அமைந்திருப்பதாக வர்ணித்துள்ளது.