இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் எதிர்வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது
குறித்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.